முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது சினிமா வாழ்க்கையில் இது ஒரு சிறந்த படம் - தமன்னா

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்து முடித்திருக்கும் தமன்னா இந்த படம் தனது சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான சிறந்த படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உணர்வுகளை சமுதாய பொறுப்போடு அழகாக இணைத்து தருவதில் இயக்குநர் சீனு ராமசாமியும் ஒருவர். இவரது ஒவ்வொரு படங்களும் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் படியாக இருக்கும். அந்தவகையில் அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான தர்மதுரை படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.

இந்நிலையில், அவரது இயக்கத்தில் அடுத்த படமாக `கண்ணே கலைமானே' படம் உருவாகி இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. சீனு ராமசாமி, யுவன் ஷங்கர் ராஜா, கவி பேரரசு வைரமுத்து ஆகியோரின் கூட்டணியில் படத்தின் பாடல்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

இது குறித்து தமன்னா பேசுகையில், '' நிறைய பேசாமலேயே நடிகர்களுக்கு அவர்களது கதாபாத்திரத்தையும், தனக்கு என்ன வேண்டும் என்பதையும் மிக சிறப்பாக விளக்கி, வேலை வாங்குபவர் இயக்குனர் சீனு ராமசாமி. `தர்மதுரை' படத்திற்கு பிறகு அவருடன் சேர்ந்து மீண்டும் பணிபுரிய வேண்டும் என ஆவலோடு இருந்தேன்.

எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் `கண்ணே கலைமானே' நிச்சயம் ஒன்றாகும். இந்த படத்தில்  உதயநிதி அவர்களின் கதாபாத்திரத்தையும், நடிப்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள். அவ்வளவு சிறப்பாக அவர் நடித்துள்ளார். `கண்ணே கலைமானே' படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் ''.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து