முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் வழங்கினார்

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தாட்கோ மூலம் மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ.3லட்சத்து 87ஆயிரத்து 880 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.  
 அதனைத் தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 22 மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் துவங்க வங்கி கடன் மானியமாக தலா ரூ.10ஆயிரம்  வீதம் மொத்தம் ரூ.2லட்சத்து 20ஆயிரம் மதிப்பிலான காசோலைகளையும், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.3ஆயிரத்து 460 வீதம் மொத்தம் ரூ.10ஆயிரத்து 380 மதிப்பிலான நவீன ஒளிரும் மடக்கு குச்சி மற்றும் கண்ணாடி என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.2லட்சத்து 27ஆயிரத்து 880 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் வழங்கினார்.  மேலும் தாட்கோ  சார்பாக 2017-2018-ஆம் ஆண்டு தாட்கோ செயல்திட்டத்தில் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறிய நிலையில் உள்ள 8 பயனாளிகளுக்கு சிறு தொழில் செய்ய தலா ஒரு நபருக்கு ரூ.20ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1லட்சத்து 60ஆயிரம் மதிப்பிலான காசோலைகளையும் ஆக மொத்தம்  33 பயனாளிகளுக்கு ரூ.3லட்சத்து 87ஆயிரத்து 880 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார். இந்நிகழ்வின் போது  உதவி ஆணையர் (ஆயம்) அமிர்தலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் என்.சுஜிபிரமிளா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேல், மாவட்ட தாட்கோ மேலாளர் செல்வராஜ் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து