முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விடுவிக்கப்பட்ட ஆ.ராசா - கனிமொழிக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு - டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க எம்.பி. கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது.

அரசுக்கு இழப்பு ....

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ குற்றச்சாட்டு கூறியது. இதன் அடிப்படையில் தி.மு.க எம்.பி கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த ஒதுக்கீடுகள் அனைத்தையும் கடந்த 2012- ம் ஆண்டு பிப்ரவரி 2-ம்தேதி ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

பணப் பரிமாற்றம்...

இதே போல ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. தி.மு.க எம்பி. கனிமொழி, ஆ.ராசா, சாஹித் பல்வா, வினோத் கோயங்கா, ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால், கரீம் மோரானி, அமிர்தம், கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

21-ம் தேதி தீர்ப்பு

இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த 2011-ம் ஆண்டு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பவர்களுக்கு எதிரான சந்தேகத்துக்கு இடமின்றி ஆதாரங்களை நிரூபிக்க சி.பி.ஐ, மற்றும் அமலாக்கத்துறை தவறி விட்டதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிபதி சைனி வழக்கில் இருந்து விடுவித்தார்.

மேல்முறையீடு...

இந்த நிலையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து