முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி : 4-வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

4-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கான தும்கா கருவூல மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 31  பேரில்  19 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில்...

பீகார் முதல்வராக இருந்த இவர் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலுபிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 15 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

5 பேர் விடுவிப்பு...

இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் மீதான தும்சா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி ஊழல் புரிந்தது தொடர்பான 4-வது வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் 13 பேர் குற்றவாளிகள் என்றும் அறிவித்தார். இவர்களுக்கு தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார். முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து