முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.94.67 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: மதுரை ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 பகுதிகளில் ரூ.94.67 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர்  .அனீஷ் சேகர், இ.ஆ.ப. அவர்கள்  ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.4 கோசாகுளம் பொது மயானத்திற்கு செல்வதற்கு ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறு பாலத்தையும், வார்டு எண்.2 ஆனையூர் குடிநீரேற்று நிலையத்தில் ரூ.9.92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவரினையும், ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள குடிநீரேற்று நிலையத்தல் ரூ.9.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள சுற்றுச்சுவரையும், ஆனையூர் குடிநீரேற்று நிலையம் பகுதி 2ல் ரூ.5.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவரையும், வார்டு எண்.23 விளாங்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள மராமத்து பணிகளையும், செங்கோல் நகர் 3 வது தெருவில் ரூ.3.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், செம்பருத்தி நகரில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.43.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா பணியினையும் என மொத்தம் ரூ.94.67 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்  .அரசு, உதவி செயற்பொறியாளர்  முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல், சுகாதார அலுவலர்   விஜயகுமார், உதவிப்பொறியாளர் மணியன், சுகாதார ஆய்வாளர்கள்  .ராஜாமணி குமார், நாகராஜ்  உட்பட மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து