முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கணி காட்டுத் தீவிபத்து குறித்து இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : குரங்கணி மலைக்காட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து இரண்டு மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், தேனி வனக் கோட்டம், கொட்டக்குடிகாப்புக் காட்டில் (குரங்கணி பகுதியில்) ஏற்பட்ட தீ நிகழ்வு தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பிரச்னை எழுப்பினர் அதற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம் வருமாறு:-

11-ம் தேதி அன்று மதியம் 2.30 மணி வனக்காவலர் முத்துப்பாண்டி மற்றும் மூன்று சூழலியல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் தீயினை அணைக்கும் பொருட்டு தீ நிகழ்வு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இவர்கள் இப்பகுதிக்கு மாலை 5 மணி அளவில் சென்றபோதுதான், மலையேற்றக் குழுவினர் தீயில் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. இதுமட்டுமல்லாமல், தீ விபத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கும், அவர்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில், தீ விபத்து நிகழ்ந்த பகுதிக்கு உடனடியாக விரைந்து செல்லும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

அமைச்சர்கள் மேற்பார்வை

மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து, தமிழ்நாடு அரசு ஹெலிகாப்டர்களைக் கோரியது. அரசு மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் 11-ம் தேதி இரவு முழுவதும் மேற்கொண்டது. எனது உத்தரவின் பேரில், 12-ம் தேதி வருவாய்த்துறை அமைச்சர், ஆர்.பி.உதயகுமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுக் சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் குரங்கணிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.

நேரில் சந்தித்து ஆறுதல்

நானும், மதுரைக்கு சென்று, தீக்காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்டநிர்வாகத்திற்கும், மருத்துவ துறையினருக்கும் நான் உத்தரவிட்டேன். மலை ஏற்றத்தில் ஈடுபட்ட 36 நபர்களில், 10 நபர்கள் காயமின்றி மீட்கப்பட்டனர். 17 நபர்களுக்கு பலத்த தீ காயங்கள் ஏற்பட்டது. மீதம் 9 நபர்கள் சம்பவ இடத்தியேயே இறந்து விட்டனர். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டேன்.

மேலும், காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளவும், வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பத்திற்கு, தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், பலத்தகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசானகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்தும் வழங்க உத்தரவிட்டேன். 

தலா ரூ. 4 லட்சம்...

சிகிச்சையில் இருந்த மேலும் 7நபர்களும் இறந்துள்ளனர். இவர்களுக்கும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். விபத்து நடந்த பகுதியில், எண்ணெய் பதம் கொண்ட உயர்ந்து வளர்ந்த சுக்கு நாரி புற்கள் அதிகம் இருந்ததால், தீ மிகவும் விரைவாக பரவியுள்ளது. இக்குழுவினருக்கு தீ விபத்து ஏற்பட்டபோது, அவர்கள் மதிய உணவுக்கு பின்னர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.

2 மாதத்தில் அறிக்கை...

டாப் ஸ்டேஷன்-ல் இருந்து குரங்கணிக்கு மலை ஏற்றம் செல்வதற்கு நுழைவுச் சீட்டு பெற்றிருந்தும், 12 நபர்கள் அங்கீகரிக்கப்படாத வேறு பாதையில் கொழுக்கு மலைக்கு செல்வது தொடர்பான தகவல் ஜெயசிங், வனவருக்கு கிடைக்கப் பெற்றது என்பது வனத் துறையின் முதற்கட்ட விசாரணையின்போது தெரிய வந்தது. அந்த வனவரும் விசாரணையின் போது இதனை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். எனவே, அவர் 12-ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எதிர்காலங்களில் இதுபோன்ற நிகழ்வு ஏற்படுவதை தடுக்கும்வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பரிந்துரைகளை வழங்கவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைமுதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு மாத காலங்களில் அவர் தனதுஅறிக்கையினை சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து