முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையை பாரதீய ஜனதா மாற்றிக் கொள்ள வேண்டும் - மத்திய அமைச்சர் பஸ்வான் அறிவுரை

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா : சிறுபான்மையினர், தலித்துகளுக்கு எதிரான மனநிலையை பா.ஜ.க மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் முதல்முறையாக ஆளும்கட்சிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் பாட்னாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் சமீபத்தில் நடந்த மக்களவை இடைத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடைந்தது. அந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. ஆட்சியில் இருக்கும்போதே தோல்வி கண்டது மக்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய அதிருப்தியின் விளைவாகும்.

குறிப்பாக சிறுபான்மை மக்கள், தலித் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை பா.ஜ.க தலைவர்கள் எடுத்ததன் காரணமாக இந்த தோல்வி கிடைத்துள்ளது. பா.ஜ.க தலைவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டியது இனிவரும் காலங்களில் அவசியமானதாகும். பீகார் மாநிலத்தைக் காட்டிலும், உத்தரப்பிரதேசத்தில் அடைந்த தோல்விதான் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜ.கவில் மதச்சார்பற்ற தலைவர்களே இல்லையா என்ற கேள்வியை இந்த தோல்வி எழுப்பி இருக்கிறது.

மத்திய அமைச்சர்கள் நித்யானந்த் ராய், கிரிராஜ் சிங் ஆகியோர் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தலித்களுக்கு எதிராகவும் கருத்துக்களைத் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லா விட்டாலும், நீண்ட ஆண்டுகளாக ஆட்சி செய்ததற்கும் தலித்துகள், பிராமணர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் ஆதரவே காரணம். ஆனால், இவர்கள் யாவருக்கும் எந்தவிதமான நல்லப்பணிகளையும் செய்யாத நிலையிலும் அவர்கள் காங்கிரஸை ஆதரிக்கிறார்கள். இதை பா.ஜ.கவினர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆதலால், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினர்கள், தலித்களுக்கு எதிராகவும் கருத்துக்களை பா.ஜ.வினர் தெரிவிப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினர்கள், தலித்களுக்கு எதிராகவும் கருத்துக்களை பா.ஜ.வினர் தெரிவிப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

ராம் விலாஸ் பாஸ்வானின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி மிகுந்த பிரபலமாகி வருகிறது.

அரசியல் காலநிலையை நன்றாக கணிப்பதில் வல்லவர் ராம் விலாஸ் பாஸ்வான். பா.ஜ.க.விற்கு எதிராக கருத்துக்களை கூறுகிறார் என்றால், பா.ஜ.கவின் சரிவு தொடங்கி விட்டது என்றும் சிலர் டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து