முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இண்டியன் வெல்ஸ்: இறுதி போட்டியில் பெடரரை வென்றார் டெல் போட்ரோ !

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

வாஷிங்டன் : இண்டியன் வெல்ஸ் டென்னிசின் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரரை, வீழ்த்திய டெல் போட்ரோ சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் இண்டியன் வெல்ஸ் நகரில் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் (பிஎன்பி பரிபாஸ் ஓபன்) நடைபெற்று வருகிறது.

போராடி கைப்பற்றி...

இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும், ஆறாவது இடத்தில் இருக்கும் அர்ஜெண்டினாவின் ஜூவான் டெல் போட்ரோவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை டெல் போட்ரோ 6-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 7-6 (10-8) என பெடரர் போராடி கைப்பற்றினார்.

சாம்பியன் பட்டம்

வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் 7-6 (7-2) என மூன்றாவது செட்டை கைப்பற்றிய டெல் போட்ரோ, 6-4, 6-7 (8-10), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.  முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகா (ஜப்பான்) - டேரியா கசட்கினா (ரஷ்யா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய நவோமி ஒசாகா முதல் இரண்டு செட்டையும் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து