முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: சென்னையை அடுத்த கீழ்ப்பாக்கம் ஸ்டேட் வங்கி சார்பில் கைப்பந்து போட்டி

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னையை அடுத்த கீழ்ப்பாக்கம் ஸ்டேட் வங்கி சார்பில் கைப்பந்து போட்டி சென்னை: ஸ்டேட் வங்கி சார்பில் கைப்பந்து போட்டி சென்னை அடுத்த கீழ்ப்பாக்கம் ஜெயலலிதா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது, மாநிலத்தில் உள்ள அனைத்து ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டி இன்று முதலாவது நாளாக தொடங்கியது. போட்டியில் மாநிலங்களின் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர், இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றனர். இந்த போட்டியை தலைமை பொது மேலாளர் ரமேஷ் பாபு தொடங்கி வைத்தார். முதல் போட்டியில் சென்னை ஸ்டேட் வங்கி ஊழியர்கள் அணியும் டெல்லி ஸ்டேட் வங்கி ஊழியர்கள் அணியும் மோதினர். முதல் சுற்றில் சென்னை அணியினர் 25 புள்ளிகளும் டெல்லி அணி 6 புள்ளிகளும் பெற்றனர். இரண்டாவது சுற்றில் சென்னை அணியினர் 25 - 6 என்ற புள்ளி கணக்கில் சென்னை ஸ்டேட் வங்கி ஊழியர்கள் அணி வெற்றிபெற்றனர் இறுதிப்போட்டி வரும் 22ம் தேதி நடைபெறுகிறது, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளனர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து