முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் 'ஏவுகணை மனிதர்' பாதுகாப்பு அமைச்சராக நியமனம்

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: சீனாவின் ஏவுகணை மனிதர் என்று கருதப்படும் வெய் பெங்கே (63) அந்த நாட்டின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராகத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் ஷீ ஜின்பிங்கின் நம்பிக்கைக்கு உரியவரான வெய் பெங்கே, சீன ராணுவத்தின் ஏவுகணைப் படைப் பிரிவு தளபதியாக பொறுப்பு வகித்தவர்.

சீனாவின் ஏவுகணைத் தாக்குதல்களின் திறனை மேம்படுத்தும் வகையில், தற்போது அந்த படைப் பிரிவு ஏவுகணைகள் பிரிவு, திட்டமிடல் பிரிவு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் அதிபரின் முடிவுகளுக்கு ஆதரவாக மட்டுமே முடிவெடுக்கும் என்று கூறப்படும் சீன நாடாளுமன்றம், வெய் பெங்கேவை பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிப்பதற்கு அங்கிகாரம் வழங்கியது.
முன்னதாக, அதிபர் ஷீ ஜின்பிங்குக்கு நெருக்கமான ஷு கிலியாங், ஷாங்க் யூக்ஸியா ஆகிய இரு முன்னாள் ராணுவ உயரதிகாரிகளும் மத்திய ராணுவக் குழுவின் துணைத் தலைவர்களாக சீன நாடாளுமன்றத்தால் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு மட்டும், 17,500 கோடி டாலரை (சுமார் ரூ.11.4 லட்சம் கோடி) பாதுகாப்புச் செலவுகளுக்காக சீனா ஒதுக்கியுள்ளது. இது இந்தியாவைவிட 3 மடங்கு அதிகமாகும்.

இந்த நிலையில், அதிபர் ஷீ ஜின்பிங்குக்கு நெருக்கமான வெய் பெங்கே பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து