முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேரி கோம் தொண்டு நிறுவனம் மீதான நிதி முறைகேடு புகார் உள்துறை அமைச்சகம் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ஒலிபிக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நடத்தி வரும் அரசு சாரா தொண்டு நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நிதி பெற்றதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ கூறியதாவது:
‘‘ஒலிம்பிக்க வீரங்கனையும், மாநிலங்களவை எம்.பியுமான மேரி கோம் நடத்தி வரும் தொண்டு நிறுவனம், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளுக்கு எதிராக நிதி பெற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் மேலும் 20 தொண்டு நிறுவனங்கள் மீது இதே போன்ற புகார் உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம். வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்ற இந்த தொண்டு நிறுவனங்கள் அதை முறைகேடாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய பொது சுகாதார பவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகள் மீது புகாரையடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. கேரளா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 15 கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் கணக்குகளையும் உள்துறை அமைச்சகம் தணிக்கை செய்து வருகிறது.

இதுபோலவே 13 கோடி ஆதார் எண்களை முறைகேடாக வெளியிட்ட புகாருக்கு ஆளான பெங்களூருவை சேர்ந்த ‘சென்டர் பார் இண்டர்நெட் சொசைட்டி’ என்ற ஆராய்ச்சி மையம் குறித்தும் உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது’’ எனக்கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து