முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் உணவுத்திருவிழா வரும் 23ல் தொடக்கம் கலெக்டர் என்.வெங்கடேஷ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      தூத்துக்குடி

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உணவுத்திருவிழா வருகிற 23ம் தேதி தொடங்குகிறது என ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பின்னர் உணவுத் திருவிழா விளம்பர போஸ்டரை  வெளியிட்டு ஆட்சியர் என். வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உணவுத்திருவிழா

தூத்துக்குடி தாலூகாவில் சராசரியாக ஆண்டிற்கு 620 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால், கடந்த 13ம் தேதி ஒரே நாளில் 200மிமீ மழை பெய்துள்ளதால் இந்த ஆண்டின் சராசரி மழை அளவை இது மிஞ்சிவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டுத் தொகை இதுவரை ரூ.100கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பாசிப்பயறு, உளுந்து வகைகளுக்கு பயிர்க்காப்பீடுத் தொகை விரைவில் வழங்கப்படும். தூத்துக்குடி ரோச் பூங்காவில் வருகிற 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை உணவுத் திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பெய்த மழை காரணமாக உணவுத் திருவிழா முத்துநகர் கடற்கரைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 50 கடைகள் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய உணவுப் பொருட்களும் உணவுத் திருவிழாவில் இடம்பெறும். தினசரி மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் 23ம் தேதி மாலையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும் 24ம் தேதி செல்லப் பிராணிகளின் கண்காட்சி, சாகச நிகழ்ச்சிகள், பெண்களுக்கான சமையல் போட்டி போன்றவை நடைபெறும். 25ம் தேதி கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் மெல்லிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். உணவு பண்டங்கள் குறைவான விலையில் தரமான முறையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேராட்டம் அமைதியாக நடைபெறும் எனக் கோரியதால் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து