முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

39 இந்தியர்களை கடத்தி கொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிகள்: உறுதி செய்தார் சுஷ்மா

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது,

இதனால், ஐஎஸ்தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலை என்ன ஆனது என்பது தெரியாமல் அவர்களின் உறவினர்கள் கவலையுடன் இருந்து வந்தனர். இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டுவிட்டனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று பேசியதாவது:

கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரில் 40 இந்தியர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டன. இதில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பினார். மீதம் இருந்த 39 இந்தியர்களும் பதூஷ் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். பதூஷ் நகரில் அதன்பின் தேடுதல் நடத்தப்பட்டதில் அனைத்து இந்தியர்களின் உடல்களும் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.

இந்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இனங்க ஈராக் அதிகாரிகள், இந்தியர்களின் உடலை ராடாரின் உதவியுடன் தேடிக் கண்டுபிடித்தனர். தோண்டி எடுக்கப்பட்ட உடல்களில் நீண்ட முடியும், ஈராக் நாட்டவர்கள் அணியாத வகையில் குட்டையான ஷூக்களும், அடையாள அட்டைகளும் காணப்பட்டன. மேலும், அந்த உடல்களை மரபணு பரிசோதனை நடத்தியதில் 39 உடல்களில் 38 உடல்களின் மரபணு இந்தியர்களின் மரபணுவுடன் ஒத்துச்சென்றது.

இதையடுத்து, 39 இந்தியர்களின் உடல்களையும் கொண்டுவருவதற்காக விரைவில் இணை அமைச்சர் வி.கே. சிங் ஈராக் செல்ல உள்ளார்'' என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து