முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் முன்னேற்றத்திற்காக 10 நாட்களில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சிறப்பு சொற்பொழிவுகள்: உலகசாதனை படைத்திட பேராசிரியர் எம்.ஜே.ராஜேஷ் பெர்னாண்டோ முயற்சி:

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு 10 நாட்களில் ஒன்றரை மணிநேர 50க்கும் மேற்பட்ட  கல்லூரிகளில் சிறப்பு சொற்பொழிவுகளை நடத்தி உலக சாதனை படைத்திட முயற்சி மேற்கொண்டுள்ள பேராசிரியர் எம்.ஜே.ராஜேஷ்பெர்னாண்டோவுக்கு திருமங்கலம் ஆனந்தம் அரிமா சங்கத்தினர் பக்கபலமாக இருந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களுரூ மாநகர் அல்சூர் பகுதியைச் சேர்ந்தவர் எம்.ஜே.ராஜேஷ் பெர்னாண்டோ(வயது.45).தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட தமிழ் இலங்கையரான இவர் தற்போது பெங்களுரூவிலுள்ள பல்கலைக் கழகமொன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்த போதிலும் கல்விக்காக ஏதாவது செய்திட வேண்டும் என்ற ஆர்வத்தில் பெண்கள் முன்னேற்றத் திற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.அதன்படி தனது மேஜிக்திறமை மற்றும் சொற்பொழிவுத் திறனை பயன்படுத்தி கல்லூரியில் பயிலும் மகளிரின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திடும் வகையில் 10 நாட்கள் தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டு 50க்கும் மேற்பட்;ட கல்லூரிகளில் குறைந்த பட்சமாக ஒன்றரை மணிநேரம் சிறப்பு சொற்பொழிவு நடத்தி உலக சாதனை படைத்திட பேராசிரியர் எம்.ஜே.ராஜேஷ் பெர்னாண்டோ திட்டமிட்டுள்ளார்.முன்னதாக பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் 10 நாட்களில் 40இடங்களில் சிறப்பு சொற்பொழிவு நடத்தி சாதனை படைத்துள்ளார்.இந்த சாதனையை முறியடித்திடும் வகையில் பேராசிரியர் ராஜேஷ் பெர்னாண்டோ கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ஆக்கம்,ஆழம்,ஆர்வம்,அளவு,அறிவு,அர்ப்பணம்,அற்புதம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மகளிரை முன்னேற்றிடும் சிறப்பு சொற்பொழிவுகளை கல்லூரிகளில் எம்.ஜே.ராஜேஷ் பெர்னாண்டோ நடத்தி வருகிறார்.கடந்த 13ம் தேதி சென்னையில் தனது உலக சாதனை முயற்சியை தொடங்கி 14ம் தேதி மதுரை,15ம் தேதி பெங்களுரூ,16ம் தேதி திண்டுக்கல்,17ம் தேதி திருப்பத்தூர்,18ம் தேதி பெங்களுரூ,19ம் தேதி மதுரை,20ம் தேதி திருமங்கலம் என 23ம் தேதி தஞ்சாவூரில் 64க்கும் மேற்பட்ட சிறப்பு சொற்பொழிவுகள் கல்லூரிகளில் நடத்தி தனது உலக சாதனை முயற்சியை எம்.ஜே.ராஜேஷ் பெர்னாண்டோ நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.இதனிடையே திருமங்கலம் நகரிலுள்ள பி.கே.என் கல்லூரியில் திருமங்கலம் ஆனந்தம் அரிமா சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று மதியம் பெண்கள் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு குறித்து மாணவிகள் மத்தியில் பேராசிரியர்.எம்.ஜே.ராஜேஷ் பெர்னாண்டோ சிறப்பு சொற்பொழிவாற்றினார்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருமங்கலம் ஆனந்தம் அரிமா சங்கத்தின் தலைவர் ரகுபதி, செயலாளர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் சிவபாண்டியராஜன்,முன்னாள் தலைவர்கள் வைரச்செழியன், கண்ணன்,மூத்த உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி,உறுப்பினர்கள் துரைப்பாண்டி, வீரூ ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து