முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கன்வாடி மையக் குழந்தைகளின் ஊட் டச்சத்து நிலையை மேம்படுத்த நிதியுதவி: கலெக்டர் சிவஞானம் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      விருதுநகர்
Image Unavailable

   விருதுநகர்-விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  சிவஞானம்  தலைமையில்  நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு,  முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  சமூகநலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் அங்கன்வாடி மையக் குழந்தைகளின் ஊட்;டச்சத்து நிலையை மேபடுத்துவதற்காக குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தை துல்லியமாக கணக்கிடும் பொருட்டு எடை எடுக்கும்; மற்றும் உயரம் எடு;க்கும் கருவி, குடிதண்ணீர் சேமித்து வைப்பதற்காக சில்வர் டிரம், உணவு பரிமாற சில்வர்; பேசின், மூடி மற்றும் கரண்டி, உணவு பொருட்கள் சேமித்து வைப்பதற்காக சில்வர் சம்படங்கள் ஆகியவற்றை ரூ.3,99,761 மதிப்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்ப நிதியிலிருந்து அங்கன்வாடி மையங்களுக்கு   மாவட்ட ஆட்சித்தலைவர்  சிவஞானம்  வழங்கினார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு துறை அலுவலர்கள் அனைவரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 27 அரசுதுறை அலுவலர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளித்து தேர்ச்சி பெற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் திருமதி.செந்தில்குமாரி(பொது), திருமதி.சுப்புலட்சுமி(சட்டப்பணிகள்), திரு.அன்புநாதன்(நிலம்),  உதவி ஆணையர் (கலால்) திரு.சங்கரநாராயணன்,  துணை தாசில்தார் (தேர்தல்பிரிவு) திருமதி.முத்துபாண்டிஸ்வரி ஆகியோர்களுக்கு ஓட்டுனர் உரிமத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  இ.ஆனந்தகுமார், கூடுதல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்)  அன்புநாதன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திருமதி.உஷா, உதவி ஆணையர் (கலால்)  சங்கரநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  சிவசங்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மாசனி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து