முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      மதுரை
Image Unavailable

   மதுரை.-  மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்  தலைமையில்  நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்.
 மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்;க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.  இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மதுரை மேற்கு வட்டத்தின் சார்பில் இந்திரா காந்தி முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், நான்கு பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், இரண்டு பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.2.10 இலட்சம் மதிப்பில் இலவச வீடு கட்டுவதற்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  ரெ.குணாளன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  .ராஜசேகரன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து