முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டபம் அருகே 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடல்பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல்அட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கடல்அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து ராமநாதபுரம்  சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் முனியசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அலுவலர்கள் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் மூடைகளுடன் இருந்த 3 பேர் ஓட்டம் பிடித்தனர். அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது படகில் கடல்அட்டைகள் கடத்துவதற்காக ஏற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது.  மொத்தம் 10 மூடைகளில் பதப்படுத்தப்பட்ட 500 கிலோ கடல் அட்டைகள் வைக்கப்பட்டிருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 3 நபர்கணை தேடிவருவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட படகின் உரிமையாளர் குறித்த விபரங்களை சேகரித்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவம், இந்த கடத்தலில் தொடர்புடைய அனைவரும்  விரைவில் கைது  செய்யப்படுவார்கள் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
     இந்த கடல்அட்டைகள் இலங்கை வழியாக வெளிநாட்டிற்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அரிய வகை  உயர்ரக கடல்அட்டைகள் விலை அதிகம் என்பதால் வெளிநாடுகளில் ஒரு கிலோ 500 டாலர் விலை போகும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ கடல் அட்டைகள் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ளவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து