முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்பிணிகளுக்கு சத்துணவுகள்

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      சென்னை
Image Unavailable

பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்பிணிகளுக்கு சத்துணவுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் சத்துணவு வழங்கி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதாதேவி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ஐசிடிஎஸ்) இது ஒரு இந்திய அரசு நலத்திட்டம் ஆகும். இது உணவு,பாலர் கல்வி மற்றும் முதன்மையான சுகாதார பராமரிப்பு போன்றவற்றை 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாக கொண்டது.

இந்த சேவைகளில் அங்கன்வாடி மையங்களை குறிப்பபாக கிராமப்புற பகுதிகளில் நிறுவப்பட்டு முன்னணி தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல்நலக்குறைவு ஆகியவற்றைத் தவிர, பெண் குழந்தைகளுக்கும் அதே வளங்களை வழங்குவதன் மூலம் பாலின சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடும் நோக்கமாக கொண்டது. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ஐசிடிஎஸ்) திட்டம் ஊட்டச்சத்து குறைப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக இல்லை என்று ஒரு 2005 ஆய்வு கண்டுபிடித்தது.

குறைந்த பாதுகாப்பு

பெரும்பாலும் இதை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களாக கருதப்படுபவை வறுமை உ ள்ள மாநிலங்கள் குறைந்த பாதுகாப்பு மற்றும் நிதியை பெறுவதாகும். அதாவது, இத்திட்டத்திற்கு 2012-13 நிதியாண்டில் இந்திய மத்திய அரசாங்கம் 159 பில்லியன் செலவிடப்பட்டது (அமெரிக்க $ 2.5 பில்லியன்) . ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டம் முக்கியமான பங்களிப்பாக கருதப்படுவது, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு குறிப்பாக பலவீனமான குழந்தைகளுக்கு எதிரான பரவலாக ஒரு முக்கிய பங்கை ஆற்றுகிறது. குறிப்பாக தமிழத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டங்களுள் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பும்,ஊட்டசத்து அளித்தலும் முக்கிய அம்சங்களாகும்.ஓவ்வொரு வார செவ்வாய்க்கிழமைகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுண்டல்,பயிறு,உருண்டை,அடை,சத்துக்கஞ்சி உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க உணவுவகைகள் அளிக்கப்பட்டு வருவதை மாண்புமிகு தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகின்றது.

இதற்கான நிகழ்ச்சியானது தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் நடைப்பெற்று வருகின்றது,அதன்படி பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் சத்துணவு வழங்கி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.உடன் மீஞ்சூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதாதேவி,பகுதி சுகாதார செவிலியர்கள் பானுமதி,ராஜேஸ்வரி உள்ளிட்ட பணியாளர்கள்,சுகாதார செவிலியர்கள் இருந்தனர்.அத்திப்பட்டு,மீஞ்சூர் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களை இதில் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து