முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய துணைமின் நிலையம் அமைக்கும் பணிகள் : கலெக்டர் .சீ.சுரேஷ்குமார் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணம், வேளாங்கண்ணி பகுதிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடைபெற்று வரும் புதிய துணைமின் நிலையம் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, "நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது முதற்கட்டமாக புதிய 110,33-11 கி.வோ நரிமணம் துணைமின் நிலைய கட்டுமான பணிகள் ரூபாய் ஆறு கோடி மதிப்பீட்டில் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இத்துணை மின் நிலையத்தில் புதிதாக 110,33 கி.வோ. 216 எம்.வி.. திறன் மின்மாற்றிகளும் 33,11 கி.வோ 28 எம்.வி.. திறன் மின்மாற்றிகளும் அமைக்கப்படவுள்ளது. துணைமின் நிலையப்பணிகள் 31.03.2018 க்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 110,33-11 கி.வோ நரிமணம் துணைமின் நிலையம் அமைப்பதன் மூலம் திருமருகல், திட்டச்சேரி, கங்களாங்சேரி ஆகிய பகுதிகளுக்கு தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்படும்.

மேலும் 110,33-11 கி.வோ நாகப்பட்டினம் துணைமின் நிலையத்தின் மின்பளு குறைக்கப்படும். புதிய 230,110 கி.வோ மற்றும் 110,33-11 நரிமணம் துணைமின் நிலைய பணிகள் விரைவில் துவக்கப்படும். வேளாங்கண்ணி பகுதியில் திருவிழாகாலங்களில் அதிகரிக்கும் மின்பளுவினையும், குறைந்த மின்னழுத்த குறைபாட்டையும் சரிசெய்வதற்காக புதிய 33,11 கி.வோ வேளாங்கண்ணி துணைமின் நிலையம் சுமார் 2.4 கோடி செலவில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த மின்மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகிறது. இம்மின்நிலையத்திற்கு நாகப்பட்டினம் 110,33-11 கி.வோ துணைமின் நிலையத்தில் புதிதாக ஒரு 110,33-11 கி.வோ 16 எம்.வி.., திறன் மின்மாற்றி அமைத்து 33 கி.வோ புதைவட கம்பி வழியாக மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

புதிய 33,11 கி.வோ வேளாங்கண்ணி துணைமின் நிலையம் அமைப்பதால் வேளாங்கண்ணி மற்றும் கிராமத்துமேடு, பரவை, காமேஸ்வரம், செருதூர், பொய்யூர் ஆகிய கிராமங்களுக்கு சீரான மின்னோட்டம் வழங்கப்படும். 110,33-11 கி.வோ நாகப்பட்டினம் துணைமின்நிலையத்தில் புதிய 3311 கி.வோ வேளாங்கண்ணி துணைமின் நிலையத்திற்கு மின்னோட்டம் வழங்கும்பொருட்டு ரூபாய் 1.8 கோடி செலவில் தற்பொழுது 110,33 கி.வோ புதிய கூடுதல் 16 எம்.வி.. திறன் மின்மாற்றி அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இப்பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்." என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வைப் பொறியாளர் டி.சாமுவேல் ராஜசேகரன், செயற்பொறியாளர் ரோஜா ரமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டாட்சியர் இராகவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து