முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம் - மனம் திறந்த தினேஷ் கார்த்திக் !

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பமாகும் என தினேஷ் கார்த்திக் கூறி உள்ளார்.

மிகச்சிறந்த இன்னிங்ஸ்

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சிக்சர் அடித்தால் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது என தமிழக வீரர் தினேஷ்கார்த்திக் பேட்டியளித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டி தனிப்பட்ட முறையில் எனது மிகச்சிறந்த இன்னிங்ஸ். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முடியும் என நம்பினேன்.

நீண்டநாள் விருப்பம்

தமிழக அணியில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் தானாகவே வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் பேசுவதை விட தமிழில் பேசவே பிடிக்கும. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மிகவும் திறமையான பந்துவீச்சாளர். வாய்ப்பு கிடைக்கும் போது தங்கள் திறமைகளை வீரர்கள் வெளிப்படுத்த வேண்டும்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம். இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி இருக்கும்போது வாய்ப்புகளை பயன்படுத்துவது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து