முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு நடத்தி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

புதன்கிழமை, 21 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

ஐ.நாடுகள் சபை : இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையை ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் ஊக்குவிப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் தெரிவித்தார்.

ஐ.நா.வில் செய்தியாளர்களை சந்தித்த டுஜாரிக்கிடம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியது:

இந்தியா-பாகிஸ்தான் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இருதரப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் ஊக்கமளிக்கிறோம். இந்த விவகாரத்தில் இந்தியா அல்லது பாகிஸ்தானின் பிரதமர்களுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பேசினாரா என்று கேட்கிறீர்கள். அது தொடர்பாக தற்போது கூறுவதற்கு úஏதுமில்லை என்றார் டுஜாரிக்.

அவர் கடந்த காலங்களில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளரின் கருத்து என்ன என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்கும் நேரங்களில் ஒரேவிதமான பதிலை அளிப்பதே வழக்கம். அதாவது, 'ஐநா பொதுச்செயலாளர் காஷ்மீர்நிலவரத்தை கவனித்து வருகிறார்' என்பதே டுஜாரிக்கின் பதிலாக இருக்கும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வைக் காண வேண்டும் என்று அண்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி வந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து