முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் விடுவிப்பு

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

டாப்ச்சி: நைஜீரியாவில் கடத்தப்பட்ட 110 பள்ளி மாணவிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நைஜீரியாவின் யோபே மாகாணத்தில் உள்ள டாப்ச்சி பகுதியில் அரசு மகளிர் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.

இங்கு போகோ ஹராம் தீவிரவாதிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் மாணவிகள், பேராசிரியைகள் பலர் காயமடைந்தனர். மேலும் இந்தத் தாக்குதலுக்கு பிறகு கல்லூரியில் பயிலும் சுமார் 110 மாணவிகள் மாயமாகி இருப்பதாக நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது கடத்தப்பட்ட மாணவிகளில் பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நைஜீரியா அரசு தரப்பில், "தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளில் 104 பேர் நைஜீரியாவில் டாப்ஜி நகரில் விடுவிக்கப்பட்டனர்" என்று கூறப்படுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு போர்னோ மாநிலத்தில் பள்ளி ஒன்றில் கடத்தப்பட்ட சில மாணவியர் இன்னும் தீவரவாதிகளின் பிடியில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து