முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்லாந்து பகல்-இரவு டெஸ்ட்: போல்ட், சவுத்தியின் பந்துவீச்சில் 58 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து!

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து: நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் போல்ட், சவுத்தியின் அனல்பறக்கும் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி 58 ரன்னில் சுருண்டது. போல்ட் 32 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். சவுத்தி 4 விக்கெட் கைப்பற்றினார்.

பென்ஸ்டோக்ஸ்...
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் பகல்-இரவாக ஆக்லாந்தில் நேற்று தொடங்கியது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று இங்கிலாந்து முதலில் விளையாட அழைத்தார். இங்கிலாந்தை அணியில் ‘ஆல்ரவுண்டர்’ பென்ஸ்டோக்ஸ் இடம் பெற்றார். 7 மாதங்களுக்கு பிறகு அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

27 ரன்னில்...
டிரென்ட் போல்ட், சவுத்தி ஆகியோரின் அனல்பறக்கும் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி நிலை குலைந்தது. 27 ரன்னில் அந்த அணி 9 விக்கெட்டை இழந்தது. 9-வது வீரரான ஓவர்டன் ஒருவரே தாக்கு பிடித்து ஆடியதால் இங்கிலாந்து மிகவும் மோசமான நிலையில் இருந்து தப்பியது. அந்த அணி 20.4 ஓவர்களில் 58 ரன்னில் சுருண்டது. இரண்டு வீரர்களே இரட்டை இலக்கத்தை எடுத்தனர். கிரேக் ஓவர்டன் 25 பந்தில் 33 ரன் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஸ்டோன்மேன் 11 ரன் எடுத்தார்.

5 வீரர்கள் ‘டக்’ அவுட்
5 வீரர்கள் ‘டக்’ அவுட் ஆனார்கள். கேப்டன் ஜோரூட், பென்ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், மொய்ன்அலி, ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் 32 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும். இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக அவர் 40 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது. சவுத்தி 4 விக்கெட் கைப்பற்றினார்.

6-வது குறைந்தபட்ச...
இங்கிலாந்து அணியின் 6-வது குறைந்த பட்ச ஸ்கோராகும். இங்கிலாந்து அணி 45 ரன்னில் 1887-ம் ஆண்டு சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும். 131 ஆண்டு காலமோசமான நிலைக்கு செல்வதை அந்த அணி கடுமையாக போராடி தவிர்த்தது. நியூசிலாந்து அணி 26 ரன்னில் சுருண்டு இருந்ததே (1955) டெஸ்டில் குறைந்த பட்ச ஸ்கோராகும்.

வில்லியம்சன்...
பின்னர் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜீத்ராய் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். தற்போது வரை அந்த அணியின் ஸ்கோர் 37 ஓவருக்கு 1 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளனர். கேப்டன் கனே வில்லியம்சன் 59 ரன்கள் எடுத்து ஆடி கொண்டிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து