முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: காலதாமதமாகும் ஒசூர் விமான சேவை விரைவில் நிறைவேற்ற மத்திய அரசிற்கு வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

காலதாமதமாகும் ஒசூர் விமான சேவை விரைவில் நிறைவேற்ற மத்திய அரசிற்கு வேண்டுகோள் காலதாமதமாகும் ஒசூர் விமான சேவை : தொழில்முனைவோர்கள், பொதுமக்கள் அதிருப்தி, விரைவில் நிறைவேற்ற மத்திய அரசிற்கு வேண்டுகோள் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் விமான பயணம் செய்யும் வகையில் மத்தியஅரசால் அறிவிக்கப்பட்ட விமான சேவை திட்டம் பல மாதங்களாகியும் ஒசூரில் தொடங்கப்படாததால் தொழில்முனைவோர்கள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்தியஅரசு இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்தியஅரசின் உதான் திட்டத்தில் தமிழகத்தில் ஒசூர், சேலம், நெய்வேலி ஆகிய நகரங்களில் விமான சேவைகள் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசுடன் மத்தியஅரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் குறைவான கட்டணத்தில் சாதாரண பொதுமக்களும் விமான பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாக விமான சேவை வழங்குவதாகும். இத்திட்டத்தின்படி ஒசூர் அருகேயுள்ள பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியார் விமான பழுதுபார்க்கும் தளத்தில் இந்த விமான சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட உடன் ஒசூர் பகுதிகளில் வாழும் தொழில்முனைவோர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கு பெரும் வரவேற்பை தெரிவித்தனர். இதன் மூலம் ஒசூர் பகுதிகளில் தொழில்வளர்ச்சி பெருகும் என நம்பினர். அதேபோல கர்நாடகா மாநிலம் பெங்களுர் எலக்ட்ரானிக்சிட்டி பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவன தொழிலதிபர்கள், பல்துறை சார்ந்த தொழில்முனைவோர்கள் ஒசூர் விமான நிலையத்திற்கு பெரும் வரவேற்பு தெரிவித்தனர். எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து பெங்களுர் கெம்பேகவுடா விமானநிலையத்திற்கு செல்ல 2 மணி நேரம் ஆகும், ஆனால் ஒசூர் விமான நிலையத்திற்கு செல்ல 30 நிமிடம் போதும், இதனால் பெங்களுரு வாசிகளும் ஒசூர் விமானநிலையத்தை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் மத்தியஅரசின் உதான் திட்டத்தின்படி அறிவிக்கப்பட்ட ஒசூர் விமான சேவை திட்டம் பல மாதங்களாகியும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை, விமான சேவை தொடங்குவதற்கான எந்த வேலைகளையும் மத்தியஅரசு எடுக்கவில்லை என தொழில்முனைவோர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். ஒசூர் தனியார் விமான நிலையத்தில் விமானங்களை உடனடியாக இயக்க விமான ஒடுதளம் உள்ளிட்ட அனைத்து வசதிகள் இருந்தும் மத்தியஅரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றது. இதனால் ஒசூர் மற்றும் பெங்களுரு பகுதிகளில் வாழும் தொழில்முனைவோர்கள், தொழிலதிபர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அதிருப்தியடைந்துள்ளனர். வெறும் வெற்று அறிவிப்புடன் நின்று விடாமல் இத்திட்டத்தினை நிறைவேற்றி அனைவரின் எதிர்பார்ர்பையும் நனவாக்க வேண்டும் என மத்தியஅரசிற்கு அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி : மனோகரன், முன்னாள் எம்எல்ஏ ஒசூர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து