முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ : ஒழுக்கமுள்ள குழந்தைகளாகவும் வளர வேண்டும் என்பதற்காக இந்த அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது: கே.ஏ.செங்கோட்டையன்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

ஒழுக்கமுள்ள குழந்தைகளாகவும் வளர வேண்டும் என்பதற்காக இந்த அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது: கே.ஏ.செங்கோட்டையன் ஏழை எளிய மக்களின் 3 முதல் 4 வயது குழந்தைகள் நல்ல கல்வியாளராகவும், ஒழுக்கமுள்ள குழந்தைகளாகவும் வளர வேண்டும் என்பதற்காக இந்த அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது. இன்று இங்கு ஊட்டச்சத்துகள் ஒழுங்காக வளங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தோம். இங்குள்ள குழந்தைகள் நல்ல ஒழுக்கத்துடன் கல்வியாளராக உள்ளனர். அங்கன்வாடி மையங்களில் சுமார் 13 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். அவர்கள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது எங்களது குறிக்கோள். 11 ஆம் வகுப்பு பொது தேர்வு கடினமாக உள்ளது என்று சில மானவர்களும், எளியதாக இருந்ததாகவும் தெரிவிருக்கின்றனர். இரண்டு தரப்பு கருத்துகள் வந்ததால் இதை விசாரித்து தான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஒரே ஒரு மாணவரை வைத்து எதையும் சொல்ல முடியாது. மாணவர்களின் அறிவு இந்திய அளவில் வியக்கத்தக்கதாக உள்ளது. மாணவர்களின் தற்கொலை இனி வருங்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக தகுந்த பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும். அங்கன்வாடியில் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் ஏற்கனவே உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து