முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி மோசடியாளர்களின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்: அமலாக்கத் துறை மீண்டும் கடிதம்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, வங்கி மோசடியாளர்களின் பாஸ்போர்ட்டை முடக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அமலாக்கத் துறை மீண்டும் கடிதம் எழுதி உள்ளது.

குஜராத் மாநிலம் வடோதராவை தலைமையகமாக கொண்ட ஸ்டெர்லிங் பயோடெக் குழும இயக்குநர்கள் நிதின் மற்றும் சேதன் சந்தேசரா. இவர்கள் வங்கிகளில் ரூ.5,383 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. விசாரணையில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து, இவர்களது பாஸ்போர்ட்டை முடக்குமாறு மும்பை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அப்போதே அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. ஆனால் பாஸ்போர்ட் முடக்கப்படவில்லை. அவர்கள் குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வைர நகை வர்த்தகர் நீரவ் மோடி உள்ளிட்ட சிலர் வங்கி மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து, மோசடியாளர்களின் பாஸ்போர்ட்டை முடக்குமாறு அமலாக்கத் துறை சார்பில் வெளியுறவு அமைச்சககத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுவரை சந்தேசரா உட்பட மொத்தம் 31 பேர், நிதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு வெளிநாடு தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் வங்கி மோசடியாளர்களின் பாஸ்போர்ட்டை முடக்குமாறு அமலாக்கத் துறை வெளியுறவு அமைச்சகத்துக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து