முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தெலுங்கு தேசம் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துமாறு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனிடம் தெலுங்கு தேசம் கோரியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை தொடர்ந்து முடங்கி வருகிறது. இதனால் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி அளித்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை அவைத் தலைவரால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள இயலவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஒய்.எஸ். சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தற்போது இரு அவைகளும் முடக்கப்படுவது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அமளியில் ஈடுபடுவோரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் அனைத்து எம்.பி.க்களின் கருத்தையும் அறிவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துமாறு நாங்கள் சுமித்ரா மகாஜனிடம் கேட்டுக் கொண்டோம்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதால் மட்டுமே அரசு கவிழ்ந்து விடாது. எனவே, அந்தத் தீர்மானத்தை விவாதத்துக்கு ஏற்கும்படி ஒரு கோரிக்கை வரும் போது அதை ஏற்க வேண்டியது ஆளுங்கட்சியின் பொறுப்பாகும்.
இது தொடர்பாக விவாதம் மட்டும் நடக்குமே தவிர வேறு ஒன்றும் நடந்து விடாது. அரசுக்குப் போதிய எம்.பி.க்கள் பலம் இருப்பதால் ஆளும் தரப்பினர் எதையும் இழக்கப் போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து