முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நயவஞ்கர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அ.தி.மு.க. அரசு 100 ஆண்டுகள் நீடிக்கும் சென்னையில் நடந்த சாதனை விளக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அ.தி.மு.க. அரசு இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும் பூனைகள் கூடி யானையை அசைக்க முடியாது என்றும் முதல்வர் ஆவேசமாக பேசினார்.

விளக்க கூட்டம்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஓராண்டு பூர்த்தியானதை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சி...
முன்னதாக அரசின் சாதனை விளக்க கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சியை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துடன் முதல்வர் பழனிசாமி சுற்றிப் பார்த்தார். அமைச்சர்களும் கண்காட்சியை சுற்றிப் பார்த்தனர். அதை தொடர்ந்து சாதனை மலரை முதல்வர் வெளியிட அதை  துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார். சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்களும் வரிசையாக சாதனை மலரை பெற்றுக் கொண்டனர். பின்னர் நடந்த விழா கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

ஒற்றுமையுடன்..
மக்கள் நலத்திட்டங்களால் ஜெயலலிதா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நிலைத்து நிற்பார் என்று பேசிய முதல்வர், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்றும், மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் விரைவில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் பெற்ற திட்டங்களையும் முதல்வர் பட்டியலிட்டு பேசினார். கட்சியில் படிப்படியாக வளர்ந்து முதலமைச்சராகி உள்ளேன் என்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் அ.தி.மு.க அரசு இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் பூனைகள் கூடி யானையை அசைக்க முடியாது என்றும் அவர் ஆவேசமாக பேசினார். பின்னர் அவர் அரசின் திட்டங்களை குறிப்பிட்டார். அதன் விபரம் வருமாறு,

முதன்மை மாநிலமாக...
தமிழகம் முழுவதும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும். 30 மாவட்டங்களிலும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும். அதற்காக அரசு ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. உழைக்கும் மகளிருக்காக இரு சக்கர வாகனத்தை வழங்கிய அரசு அ.தி.மு.க அரசுதான். மேலும் வறட்சிக்காக நிவாரணம் வழங்கி ஒரே அரசு அ.தி.மு.க. அரசுதான். பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது. ஓகி புயலின் போது காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் நிதி வழங்கப்பட்டது. உயர் கல்வியில் தமிழகமே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில்தான். இவ்வாறு தூர்வாரப்படுவதால் 15 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். விவசாயிகளுக்கு வண்டல் மண்ணை அளித்ததும் அ.தி.மு.க. அரசுதான். அனைவருக்கும் வீடு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வலியுறுத்துவோம்...
நாங்கள் இதையெல்லாம் தேர்தலை மனதில் கொண்டு செயல்படுத்தவில்லை. காரணம், மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை கொண்ட அம்மா வழியில் வந்தவர்கள் நாங்கள். அதனால்தான் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துகிறோம். மீனவர்கள் மீது தனி அக்கறை கொண்டது இந்த அரசு. இலங்கை சிறையில் மட்டுமல்ல, ஈரான் சிறையில் இருந்த மீனவர்களையும் விடுவித்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் தமிழக அரசை விமர்சித்து சிலர் விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மத்திய அரசு நிச்சயம் செயல்படுத்தும் என்று நம்புகிறோம். ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கைக்காக ரூ. 10 கோடி வழங்கியது அ.தி.மு.க. அரசுதான். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.

முன்னதாக, இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார். அப்போது தடைகளை கடந்து சாதனை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று புகழாரம் சூட்டினார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து