முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 2018: பயிற்சியை தொடங்கினார் சி.எஸ்.கே கேப்டன் டோனி

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி நேற்று முதன்முறையாக ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

மூத்த வீரர்களை...
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் அடுத்த மாதம் 7-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அணி வீரர்களும் ஐபிஎல் பயிற்சி முகாமிற்கு வந்த வண்ணம் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வருட தடைக்குப்பின் தற்போது களம் இறங்குகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மூத்த வீரர்களை அதிக அளவில் ஏலம் எடுத்துள்ளது. புதுக்கலவையுடன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்க இருக்கிறது.

முதன்முறையாக பயிற்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை வந்த வண்ணம் மூத்த வீரர்களான ஹர்பஜன் சிங், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் ஆன டோனி விளையாடவில்லை. அந்த சமயத்தில் ஓய்வு எடுத்த டோனி, நேற்று சிஎஸ்கே அணிக்காக முதன்முறையாக பயிற்சி மேற்கொண்டுள்ளார். இவருடன் அம்பதி ராயுடு, ஜடேஜா, ரெய்னா, ஷர்துல் தாகூர் ஆகியோரும் பயிற்சி மேற்கொண்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் டோனியை ‘தல’ என குறிப்பிட்டுள்ளது. ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து