முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் ஓராண்டு சாதனை விழா துளிகள்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

* ஒராண்டு சாதனை பற்றிய கண்காட்சியை கலைவாணர் அரங்கில் நேற்று முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார்.

*  32 துறைகளை சார்ந்த சாதனைகள் குறித்து பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன, இந்த கண்காட்சியை தொடங்கிவைத்த முதல்வர்.

* கிட்டதட்ட அரை மணிநேரம் அதை பார்வையிட்டார்.

*  சாதனை கண்காட்சியை முதல்வர் தொடங்கிவைத்த பின்னர் விழா தொடங்கியது. அப்போது மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

* மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

* விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், அநீதி பகைமைக்கு அஞ்சாமல் அம்மாவின் எண்ணங்களை நிறைவேற்றி புதிய சாதனை படைக்கும் சாதனை மன்னராக வலம் வருகிறார் முதல்வர் எடப்பாடி என்று புகழாரம் சூட்டினார்.

* முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒராண்டு ஆட்சியின் சாதனை குறித்து 17-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிட்டு காட்டப்பட்டன. அதை அமைச்சர்கள் அ.தி.மு.க.வினர் இவர்களோடு பொதுமக்கள் ரசித்து பார்த்தனர். மடிக்கணினி ஆற்றுமணலுக்கு மாற்றுமணல் , நீராபானம் நீர்வளம் என்று அரசின் சாதனைகள் குறித்த 9 பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.

* முதல்வர் எடப்பாடி அரசின் சாதனைகள் குறித்த புத்தகங்களும் அவர் சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள், பேரவை விவாதத்திற்கான பதில்கள், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் வெளியிட்ட அறிவிப்புகள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவர் நிகழ்த்திய உரைகளில் இருந்த தொகுக்கப்பட்ட பொன்மொழிகள் உள்ளிட்ட 7 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

* வெற்றி நாயகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்து விட்டார், என்று விழா தொகுப்பாளர் கணீர் குரலில் சொல்ல அரங்கில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து