முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் கஷ்டத்தைப் பற்றி கவலைப் படாதவர்கள் சிஸ்டத்தைப் பற்றி பேசுவதா? ரஜினி மீது ஓ.பி.எஸ் தாக்கு

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: மக்களின் கஷ்டத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாதவர்கள் சிஸ்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் மீது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் ஒராண்டு சாதனை விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் பேசியதாவது:

மூன்று அதிர்ச்சிகள்
இந்த ஓராண்டு சாதனையில் மக்களுக்கும், விசுவாசத் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி. நம்மை எதிர்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சி. அதுவும் மூன்று அதிர்ச்சிகள். ஜெயலலிதா கடும் உழைப்பால் உருவாக்கிய நல்லாட்சியை, அவரது மறைவுக்கு பின், அம்மாவின் விசுவாசத் தொண்டர்கள் சிந்தாமல், சிதறாமல் கட்டிக் காத்து ஓராண்டைக் கடந்து விட்டார்களே என்பது முதல் அதிர்ச்சி. ஜெயலலிதா வகுத்துத் தந்த திட்டங்களை எல்லாம் குன்றாமல், குறையாமல் நிறைவேற்றி, பல சாதனைகள் படைத்து வருகிறார்களே என்பது இரண்டாவது அதிர்ச்சி. எதிர்ப்புகளை முறியடித்து, துரோகங்களை துவம்சம் செய்து, தங்கு தடையின்றி, பொங்கும் வெள்ளம் போல, ஐந்து ஆண்டுகளையும் நிச்சயம் நிறைவு செய்து விடுவார்கள் என்பது மூன்றாவது அதிர்ச்சி.

பல விருதுகள்...
துரோணாச்சாரியாரிடம் பாடம் கற்ற அர்ஜுனன் போலஜெயலலிதாவிடம் பாடம் கற்ற அர்ஜூனர்கள் நாங்கள். எம்.ஜிஆர் ஒரு திரைப்படத்தில் பேசுவதை போல நாங்கள் வைக்கும் குறி தப்பவே தப்பாது். நாங்கள் வைக்கின்ற குறியெல்லாம், தமிழ் நாட்டைமிக உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதுதான். அம்மா அரசு செய்த சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதற்கு நேரம் போதாது. அம்மா அரசு பெற்ற விருதுகளை சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கும் நேரம் போதாது. தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படும் விதமாக விருதுகளை நாம் குவித்திருக்கிறோம். இப்படி அம்மாவின் அரசு, அடுக்கடுக்காய் விருதுகளை சம்பாதித்து வருவதைத்தான், சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தாய்மார்களின் உடல் உழைப்பை குறைத்து நிம்மதி. நிறைந்த ஓய்வு தர வேண்டும் என்பதற்காகத்தான் இல்லத்தரசிகளுக்கு கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி கொடுத்தார் ஜெயலலிதா. அதை இந்த அரசு,இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கருணைக் கரம் நீட்டி, அம்மாவின் ஆட்சி வழங்குவதுதான் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டி. எதிர்கட்சினர் நமக்கு எதிராக தொடுத்த அத்தனை அஸ்திரங்களையும், தர்மத்தின் வழியிலே, சத்தியத்தின் வழியிலே, அம்மாவின் தொண்டர்களாகிய நாங்கள் தகர்த்தெறிந்தோம்.  எதிர்கட்சியினர் என்ன விமர்சனம் செய்தாலும்,நாங்கள் கவலைப்படவும் இல்லை. கலங்கவும் இல்லை.
எந்த பயமும் இல்லை
எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படுவதும், கலங்கி நிற்பதும் எதிர்கட்சினர்தான். எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும், லட்சியங்களையும் நிறைவேற்றி யாராலும் அசைக்க முடியாத எஃகுக் கோட்டையாக நமது கழகத்தை மாற்றியவர்,ஜெயலலிதா அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் நம்முடைய ஒன்றரைக் கோடிவிசுவாசத் தொண்டர்கள். அதிமுக , இயக்கத்தை கபளீகரம் செய்வதற்கு, சில கழுகுகள் பறந்து கொண்டிருக்கின்றன.  ஜெயலலிதா புகழ்பாடும் விசுவாசத் தொண்டர்களும், அம்மா அவர்களை உயிராக நினைக்கும் விசுவாசத் தொண்டர்களும் இருக்கும் வரை,நமது இயக்கத்தைஎந்தக் கொம்பனாலும்தொட்டுக் கூட பார்க்கமுடியாது. இப்போது, புதிது புதிதாக சிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் கஷ்டத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாதவர்கள் சிஸ்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.

அடங்கிப்போய்....
அம்மா ஆண்ட நாட்டை, விசுவாசத் தொண்டர்கள்தான்ஆள வேண்டும் என்று, தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். காரணம், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும், இந்த அரசு, அம்மாவின் அரசாகவே முதல்வர் எடப்பாடி. பழனிசாமி தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் வழியிலே, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அம்மாவின் தொண்டர்களாகிய நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, இந்த ஆட்சி நிலைக்காது, நீடிக்காது என்று, பரபரப்பாக பேசியவர்களும், அடுக்கடுக்காக அறிக்கைகள் விட்டவர்களும், ஆரூடம் கூறியவர்களும், ஆடி அடங்கிப்போய் விட்டார்கள்.  பூனைகள் கூடி யானையை அசைத்துப் பார்த்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் தமிழ் நாட்டை மேலும், மேலும் உயர்த்திட தர்மத்தின் பாதையில் நடப்பவர்கள். ஜெயலலிதாவின் பாதையில் நடப்பவர்கள்.

மீண்டும் ஆட்சி அமைக்கும்
தன்னலம் கருதாது, உடல் நலம் பாராது ஓய்வில்லாமல் உழைத்து, உழைத்து தமிழகத்தின் எட்டுத் திசைகளிலும் சுற்றிச் சுழன்று, மக்களைச் சந்தித்து, 32 ஆண்டு கால வரலாற்றை உடைத்து ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற புதிய வரலாற்றை உருவாக்கி மகத்தான வெற்றி பெற்று, ஜெயலலிதாஅமைத்துக் கொடுத்த ஆட்சி, இந்த ஆட்சி. இந்த ஆட்சிக்கு ஊறு செய்திடலாம் என்று நினைப்பவர்களை, ஒரு நாளும் நாங்கள் விட மாட்டோம். எங்களை வெல்ல நினைக்கும்எதிரிகளையும் விட மாட்டோம். குழி பறிக்க எண்ணும் துரோகிகளையும்நாங்கள் விட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து