முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸில் பயங்கரவாதத் தாக்குதல்: 3 பேர் பலி

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

டிரீப்ஸ், பிரான்ஸில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத ஆதரவாளர் என்று கருதப்படும் மர்ம நபர் வெள்ளிக்கிழமை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 3பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தது:

மொராக்கோவைச் சேர்ந்த அந்த பயங்கரவாதி இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் என்று சந்தேகிக்கப்படுகிறது. டிரீப்ஸ் சுற்றியுள்ள பகுதி மற்றும் கார்கோஸானி நகரம் உள்ளிட்ட மூன்று வெவ்வேறு பகுதிகளில் அவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

காரில் இருந்த பயணியை சுட்டுக் கொன்றுவிட்டு கார்கோஸானியிலிருந்து காரை டிரீப்ஸ் நகருக்கு ஓட்டிச் சென்றுள்ளார். இந்த தாக்குதலின்போது அந்த கார் ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு சற்று முன்னதாக தனது நண்பர்களுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த காவலரை நோக்கி அந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
காரை ஓட்டிச் சென்று வணிக வளாகத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்தவர்களை பிணையக் கைதிகளாக அந்த மர்ம நபர் பிடித்த வைத்துக் கொண்டார்.

இதையடுத்து, தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி அந்த மர்ம நபரை சுட்டுக் கொன்றனர். சுமார் மூன்று மணி நேரம் வரை நீடித்த இந்த தாக்குதலின்போது இரண்டு பணயக் கைதிகளை அந்த மர்மநபர் சுட்டுக் கொன்றுவிட்டார்.

தாக்குதல் நடத்தியவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து