முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனரா, தேனா வங்கிகளை இணைக்கும் திட்டமில்லை: மத்திய நிதியமைச்சகம்

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது தில்லி, கனரா, தேனா வங்கிகளை ஒன்றாக இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் எழுத்துப்பூர்வமாக தனது பதிலைத் தாக்கல் செய்துள்ளார். அந்தப் பதிலில், "சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய வங்கிகளிடம் இருந்து, அவற்றை ஒன்றாக இணைப்பது தொடர்பான திட்டம் எதுவும் மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியுடன் ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கிகள் மற்றும் பாரதீய மகிளா வங்கி ஆகியவை இணைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதற்கு மத்திய அமைச்சரவையும் தனது ஒப்புதலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் அளித்தது.

இதையடுத்து, அந்த வங்கிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாக இணைக்கப்பட்டன.

இந்த இணைப்பின் மூலம், பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 37 கோடியாகவும், வங்கிக் கிளைகள் 24 ஆயிரமாகவும், ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை 59 ஆயிரமாகவும் உயர்ந்தது. இந்த இணைப்புக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கியுடன் ஸ்டேட் பேங்க் ஆப் சௌராஷ்டிரா வங்கி கடந்த 2008ஆம் ஆண்டிலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூர் வங்கி கடந்த 2010ஆம் ஆண்டிலும் ஒன்றாக இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து