முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு காஷ்மீரில் ரயில் போக்குவரத்து நிறுத்தம்

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், தெற்கு காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரில் அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து தெற்கு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு காரணத்திற்காக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அதிகாரி கூறுகையில்,

அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து, போலீஸார் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் அளித்த ஆலோசனையின் படி பாதுகாப்பு காரணத்திற்காகவும், பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு தெற்கு காஷ்மீரில் ரயில் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தெற்கு காஷ்மீரில் பட்ஹாம்-ஸ்ரீநகர்-அனந்த்நாக்-காசிகுந்த் பகுதியிலிருந்து பனிஹால் பகுதிக்கு இயங்கி வரும் ரயில்கள் சேவை நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது. அதே வேளையில் வடக்கு காஷ்மீர் பகுதியில் எப்போதும் போல ரயில்கள் இயங்கும் எனக் கூறினார். பாதுகாப்பு காரணத்திற்காக காஷ்மீர் பகுதியில் கடந்த வருடம் 50-க்கும் அதிகமான முறை ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து