பிரபல இந்தி நடிகை பாலியல் புகார்: மும்பை தொழிலதிபர் கைது

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      சினிமா
Zeenat Aman 2018 03 24

மும்பை, பிரபல இந்தி திரைப்பட நடிகை ஜீனத் அமன் அளித்த பாலியல் பலாத்கார புகாரை தொடர்ந்து மும்பை தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை ஜுகு காவல் நிலையத்தில் நடிகை ஜீனத் அமன் ஒரு புகாரை அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தொழிலபதிபர் ஒருவரை உடனே கைது செய்து அவரை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பாக மும்பை மாநகர காவல் துணை ஆணையர் நிசார் தம்போலி கூறுகையில், நடிகை ஜீனத் அமன் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது என்றார்.

இந்தி திரைப்பட உலகில் 1970, 80-களில் மிகவும் பிரபலமாக விளங்கிய நடிகைகளில் ஜீனத் அமனும் ஒருவர். இவர் இதே தொழிலதிபர் மீது மும்பை போலீஸாரிடம் கடந்த ஜனவரியில் ஒரு புகார் அளித்தார். தன்னை பின் தொடர்ந்ததாகவும் மானபங்கம் செய்ததாகவும் அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து