முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21-வது காமன்வெல்த் போட்டி: தொடக்க விழாவில் பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடக்க விழாவின் போது இந்தியா சார்பில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.

ஆஸ்திரேலியாவில்...

21-வது காமன்வெல்த் போட்டி வருகிற ஏப்ரல் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடக்கிறது. இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடக்க விழாவின் போது ஒவ்வொரு நாட்டு வீரர்- வீராங்கனைகளின் அணி வகுப்பு நடக்கும். இதில் இந்தியா சார்பில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். அவர் பின்னால் இந்திய வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்து செல்கிறார்கள்.

சிறப்பு கவுரவம்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து பல சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது. 2006-ம் ஆண்டு மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், 2010-ம் ஆண்டு போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய்குமார் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து