முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை தேர்தலில் வெற்றி: ராஜ்யசபாவில் பா.ஜ.க-வின் பலம் 69-ஆக அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ராஜ்யசபாவில் பா.ஜ.கவின் பலம் 69 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையைப் பெறுவதற்கான வியூகத்தை பா.ஜ.க. வகுத்து வருகிறது.

ராஜ்யசபாவில் காலியான 58 இடங்களுக்கான தேர்தல் கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. இதில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 33 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதில் பா.ஜ.க வேட்பாளர்கள் 16 பேர் அடங்குவர். எஞ்சிய 25 இடங்களுக்கான தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் 12 பேர் வென்றனர். மொத்தம் 58 இடங்களில் பா.ஜ.க -28, காங்கிரஸ் 10 எம்.பிக்களைப் பெற்றது. இதர கட்சிகளுக்கு 20 எம்.பி.க்கள் கிடைத்தனர்.

இதையடுத்து தற்போது ராஜ்யசபாவில் பா.ஜ.கவின் பலம் அதிகரித்துள்ளது. தற்போது ராஜ்யசபாவில் பா.ஜ.க - 69, காங்கிரஸ் - 50, திரிணாமுல் - 13, சமாஜ்வாதி - 16, பிஜூ ஜனதா தளம் - 10, பகுஜன் சமாஜ் -5 எம்.பிக்கள் உள்ளனர். ராஜ்யசபாவில் பலத்தை உயர்த்தியுள்ள பா.ஜ.க, பெரும்பான்மையை பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து