முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 ம.ஜ.த. கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய 7 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

2016-ல் கர்நாடகாவில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் ம.ஜ.த கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தனர். இதையடுத்து தேவ கவுடா, 7 எம்.எல்.ஏக்களையும் தனது கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தார். இதனால் அதிருப்தி அடைந்த 7 பேரும் , காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் இவர்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மைசூரு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில், முன்னாள் ம.ஜ.த.கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள்  7 பேரும் காங்கிரஸில் இணைந்தனர்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி கூறுகையில், ம.ஜ.த-வில் இருந்த 7 பேரும் கட்சியில் இருந்து விலகியது எனக்கு வேதனை அளிக்கிறது. லிங்காயத்து விவகாரத்தில் இந்து மதத்தை உடைத்த காங்கிரஸ், இப்போது ம.ஜ.த.வையும் உடைத்திருக்கிறது. வருகிற தேர்தலில் மக்கள் காங்கிரசுக்கு தக்க பதிலடி தருவார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து