முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் இல்லாமல் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை அமைப்பது சாத்தியமில்லை: பிருத்விராஜ் சவான் பேட்டி

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, காங்கிரஸ் இல்லாமல் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பது சாத்தியமாகாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போன்றோருடன் இணைந்து தேசிய அளவில் கூட்டணி அமைக்கப்படும் என யாரேனும் தெரிவிக்கலாம். ஆனால், காங்கிரஸ் இல்லாமல் அந்த அணியை ஏற்படுத்த வேண்டும் எனில், அது நிச்சயம் சாத்தியமாகாது. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மக்களவை இடைத் தேர்தலில் சமாஜவாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் ஏன் காங்கிரஸ் கூட்டணி சேரவில்லை எனக் கேட்கிறீர்கள். அந்தத் தேர்தலின் முக்கிய செய்தியே, ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்தால், பா.ஜ.கவை வரும் தேர்தல்களில் தோற்கடிக்க முடியும் என்பதுதான்.

தொடர் தோல்விகளால் காங்கிரஸின் செல்வாக்கு குறைந்து விட்டதாக கூற முடியாது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு இன்னமும் அப்படியேதான் உள்ளது. பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி செல்வாக்கான கட்சியாகத்தான் திகழ்கிறது. நாடு முழுவதும் பரவலாக பா.ஜ.கவை எதிர்க்கக் கூடிய கட்சி என கருதினால், அது காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்க முடியும் என்று பிருத்விராஜ் சவான் தெரிவித்தார். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து