முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடக்குத் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.80 லட்சம் மதிப்பீட்டிலான பணிகள்

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      மதுரை
Image Unavailable

மதுரை.-   மதுரை மாநகராட்சி வடக்குத் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண்.5 பகுதியில் ரூ.12.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்;ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் பேவர் பிளாக் சாலையினை மாவட்ட ஆட்சித் தலைவர்.கொ. வீர ராகவ ராவ், தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், முன்னிலையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்.வி.வி.ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.
மதுரை மாநகராட்சி வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் எண்.1 வார்டு எண்.5 பீ.பீ.குளத்தில் வடக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நேதாஜி மெயின் ரோடு, இந்திரா நகர் 1 வது தெருவில் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துறை கிணறு அமைத்து சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கும் ஆர்.ஓ.பிளாண்ட் இயந்திரத்தினையும், அன்னை தெரசா தெருவில் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும் என மொத்தம் ரூ.12.80 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்  .அரசு, உதவி செயற்பொறியாளர்  .முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர்கள்  .முகம்மது ரசூல்,  சித்திரவேல், சுகாதார அலுவலர்  விஜயகுமார், உதவிப்பொறியாளர்  .பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர்  .ராஜாமணிகுமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து