முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேவு பார்க்க இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ ஹெலிகாப்டர் !

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

ஷமோலி : சீன ராணுவ ஹெலிக்காப்டர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வேவு பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4-வது முறை...

சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் நுழைந்து வட்டமடித்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் சீன ராணுவ ஹெலிகாப்டர் இதுவரை நான்கு முறை வட்டமடித்து உள்ளது. நேற்று உத்தரகாண்டின் ஷமோலி மாவட்டத்தில் உள்ள பரஹோட்டி பகுதியில் எல்லைக் கோட்டை தாண்டி இந்திய வான்பரப்பிற்குள் சீன ராணுவ ஹெலிகாப்டர் நுழைந்து வட்டமடித்துள்ளது. சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைவது ஒரே மாதத்தில் இது 4-வது முறையாகும்.

5 நிமிடங்கள்...

கடந்த 10-ம் தேதி சீன ராணுவத்தின் 3 ஹெலிகாப்டர்கள், இந்திய எல்லைக்குள் 4 கிலோ மீட்டர் தூரம் வரை ஊடுருவி பரஹோட்டி பகுதியில் 5 நிமிடங்கள் வட்டமடித்தன. இதற்கு முன்பு கடந்த 8-ம் தேதி சீன ராணுவத்தின் 2 ஹெலிகாப்டர்கள், இந்திய வான் எல்லைக்குள் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊடுருவி லடாக் பகுதியில் வட்டமடித்தன. பிப்ரவரி 27-ம் தேதியும் சீன ஹெலிகாப்டர் ஒன்று 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய வான் பரப்பிற்குள் ஊடுருவி லடாக்கின் பகுதியில் வட்டமடித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து