முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் மீனவர்கள் நான்கு அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிப்பு

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,மார்ச்,27: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கோருவது உள்பட நான்கு அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்கள் நடத்துவது என நேற்று அறிவித்தனர்.
   ராமேசுவரம் துறைமுகம் பகுதியில் அனைத்து மீனவ சங்க பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ராமேசுவரம் மீனவ சங்க தலைவர் என்.ஜே.போஸ் தலைமை வகித்தார். மேலும்  கூட்டத்தில்  ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீனபிடிக்க சென்ற மீனவர்கள் உள்பட தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை வவுனியா சிறையிலும்,யாழ்பாணம் சிறையிலும் பிரித்து அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த 27 மீனவர்களை விடுவிக்கோரியும்,  கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு தன் வசம் வைத்துள்ள தமிழக மீனவர்களின் 184 படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சிறைகளிலுள்ள மீனவர்களின் குடும்பங்கள் மற்றும்  184 படகுகளின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் எனவும், மேலும்  மீன்பிடி தடைக்காலத்திற்க்குள் கிடப்பில் போடப்பட்டுள்ள இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை துவங்கி பாரம்பரிய கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும்  பரஸ்பரமாக மீன்பிடி தொழில் செய்திட மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுபோல பாம்பன் குந்துகால் துறைமுகப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31 ந்தேதி தமிழக மீனவர்களை ஒருங்கிணைத்து ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து,அன்று   ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என முடிவு செய்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மீனவ சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து