முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் 86 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் - முதல்வர் - துணை முதல்வர் நடத்தி வைத்தனர்

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

தொண்டாமுத்தூர் : ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோவையில் 86 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்தி வைத்தனர்.

86 ஜோடிகளுக்கு...

ஜெயலலிதாவின் 70-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 86 ஏழை ஜோடிகளுக்கு கோவை தொண்டாமுத்தூர் ராஜலட்சுமி கல்யாண மண்டபம் எதிரில் உள்ள பிரமாண்ட பந்தலில் நேற்று திருமணம் நடந்தது. திருமண விழாவுக்கு புறநகர் மாவட்ட செயலாளர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். விழாவில் 86 ஜோடிகளுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி அம்மா வீட்டு சீதனமாக 70 வகை சீர்வரிசை பொருட்களை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வழங்கினர்.

அமைச்சர்கள் பங்கேற்பு...

விழாவில் துணை சபாநாயகர், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, துரைக்கண்ணு, டாக்டர். சரோஜா, கருப்பண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பவானி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து