முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூட்ரினோ திட்டம் மட்டுமின்றி எந்தவொரு திட்டமும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக தமிழகத்தில் நிறைவேற்றப்படாது - அமைச்சர் ஜெயகுமார் உறுதி

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்தவொரு திட்டமும் தமிழகத்தில் நிறைவேற்றப்படாது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

மேலும் ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளரே அந்த ஆலைக்கு எதிராக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருக்கிறார் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குப்படுத்தும் குழு அமைக்கும் வரை தமிழக அரசு ஓயாது. சுப்ரீம் கோர்ட் அளித்த கெடு வரும் 29-ம் தேதி வரை உள்ளது. அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம். அதன்பிறகு தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.

சசிகலா குடும்பத்தினர் அனைவருமே மோசடியில் ஈடுபடுபவர்கள். விவேக் ஜெயராமன் எல்.எல்.பி படிப்புக்காக என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது நிரூபணமானால் அவர் சிறை செல்ல வேண்டும். - ஜெயகுமார்

நியூட்ரினோ திட்டம் மட்டுமின்றி மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்தவொரு திட்டமும் தமிழகத்தில் நிறைவேற்றப்படாது. எந்தவொரு திட்டத்திற்கும் மக்களின் கருத்து மிகவும் அவசியம். இது மக்களின் அரசு. ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பொறுத்தவரை அம்மாவட்ட மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளரே அந்த ஆலைக்கு எதிராக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், அதற்கு திறப்பு விழா நடத்தப்பட்டது தி.மு.க ஆட்சியில்தான். பல ஆண்டுகள் ஆட்சியிலிருந்து விட்டு இப்போது பல பிரச்சனைகளுக்கும் காரணம் அ.தி.மு.கதான் என்ற மாயத் தோற்றத்தை தி.மு.க உருவாக்குகிறது. சசிகலா குடும்பத்தினர் அனைவருமே மோசடியில் ஈடுபடுபவர்கள். விவேக் ஜெயராமன் எல்.எல்.பி படிப்புக்காக என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது நிரூபணமானால் அவர் சிறை செல்ல வேண்டும். வறட்சி, வெள்ளம் என எல்லா பேரிடர்களையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து