முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதிகளை மீறி சட்டப்படிப்புக்கு ஒதுக்கீடு: இளவரசி மகன் விவேக் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் விதிகளை மீறி வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டில் விவேக் ஜெயராமனுக்கு 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் வீடுகளில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது பதவி காலங்களில் பேராசிரியர் நியமனங்களுக்கு லஞ்சம் வாங்கியது; வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தியது என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மோசடியில் விவேக் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், 2015-ல் 3 ஆண்டு எல்.எல்.பி படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் விவேக் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டுக்கான எந்த ஒரு சான்றிதழையும் விவேக் தாக்கல் செய்யவில்லை. அவருக்கு முறைகேடாக இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இம்மோசடியில் ஆதாயம் அடைந்தவர் விவேக் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விவேக் மீது விரைவில் நடவடிக்கை பாய இருக்கிறது என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து