முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி முதல்வர், சபாநாயகர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - நியமன எம்எல்ஏ சாமிநாதன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      புதுச்சேரி

பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் பாஜக ஆதரவாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று சென்னை ஜகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்

இதை தொடர்ந்து  நேற்று முன்தினம் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்த போது அவர்களை சபாநாயகர் அனுமதிக்க வில்லை. இதனால் அவர்களை சபை காவலர்கள் சட்டசபை வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர பாஜக முடிவு செய்துள்ளது. இது குறித்து சாமிநாதன் எம்எல்ஏ கூறியதாவது எங்கள் நியமனம் செல்லும் என்று சென்னை ஜகோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பின்னரும் வேண்டும் எனறே எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இது கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும். எனவே முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர், போலீஸ் சூப்பிரண்டு வெங்கடாசாமி ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். இந்த வழக்கு அவசரமாக சென்னை ஜகோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும்நேற்று முன்தினம் சட்டசபைக்கு வந்தபோது, அங்கு நடந்த காட்சிகளை தனியார் உதவியுடன் வீடியோ எடுத்துள்ளோம். அந்த வீடியே காட்சியுடன் மத்திய உள்துறைக்கு புகார் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து