முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? டேரன் லீ மேன் பதவியை காப்பாற்றிய வார்த்தைகள்

புதன்கிழமை, 28 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன்: டேவிட் வார்னர் யோசனையின் படியும் ஸ்மித்தின் ஏற்பின் படியும் நடந்தேறிய பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் டேரன் லீ மேனுக்கு ஏன் இந்த விஷயம் தெரியாது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாலேயே அவர் பதவி பிழைத்தது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

செய்தி அனுப்பிய...
ஏனெனில் களத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி கோபமடைந்த லீ மேன், 12-வது வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் மூலம் பேங்க்ராப்டுக்கு செய்தி அனுப்பியுள்ளதாக விசாரணை செய்த ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்துள்ளார். திங்களன்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா நேர்மைக்குழு தலைவர் இயன் ராய், டேரன் லீ மேனுடன் கேப்டவுன் ஹோட்டல் அறையில் பேசிய போது டேரன் லீ மேன் இவ்வாறு தெரிவித்த விஷயம் அவருடன் பகிரப்பட்டது.

பங்கில்லை...
12-வது வீரர் ஹேண்ட்ஸ்கம்பிடம் பயிற்சியாளர் டேரன் லீ மென், கோபாவேசமாக, ‘அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கண்டுபிடி’ என்று கூறினார். மேலும் ஆட்ட இடைவேளையின் போது லீ மேன் வீரர்கள் அனைவரையும் தன் அறைக்கு அழைத்து என்ன நடக்கிறது என்று அனைவரையுமே கேட்டுள்ளார். இவையெல்லாம் டேரன் லீ மேனுக்கு இதில் பங்கில்லை என்பதை உறுதி செய்ததால்தான் அவரை இதில் அடக்கவில்லை’ என்றார். ஆனால், அணியின் ஒட்டுமொத்த நடத்தை குறித்தும் அதில் டேரன் லீ மேனின் பங்கு குறித்தும் தனியாக விசாரணை நடத்தப்படவுள்ளது என்றார் சதர்லேண்ட்.

ஊடகங்கள்....
இதற்கிடையே இனி ஸ்மித்தோ, வார்னரோ ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்சி பதவியை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் பல்வேறு தரப்பை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் சாண்ட்பேப்பர்தான் பயன்படுத்தப்பட்டது மஞ்சள் நிற டேப் அல்ல என்பதும், பேங்கிராப்டை இந்தப் பணியில் அமர்த்தியதோடு எப்படி பந்தின் ஒரு பகுதியைத் தேய்க்க வேண்டும் என்பதையும் வார்னரே பாடம் எடுத்ததாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து