முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் வாகன தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரிமாணவர்கள் மின் வாகன தயாரிப்பு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை மாணவர்கள் அண்மையில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இமேஜின் டூ இன்னவோடிவ் என்ற நிறுவனம் நடத்திய ஆசியா மின் வாகன தயாரிப்பு போட்டியை நடத்தினார்கள். இந்த போட்டியில் இந்தியா முழுக்க பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நிலையில், தமிழகத்தில் இருந்து டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 4 கல்லூரிகள் போட்டிகளில் பங்கேற்று அவரவர் வடிவமைத்த மின் வாகனங்களை கண்காட்சியில் வைத்தனர்.

சூரிய தகடுகள்

 போட்டியில் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் கே.சிவக்குமரன் ஒருங்கிணைப்பில் , மாணவர் லோகேஷ்வரன் தலைமையில் 25 பேர் கொண்ட மாணவர் குழு உருவாக்கி மின் பைக் போட்டியில் பங்கேற்றது. போட்டியை ஒட்டி 7 விதமாக சோதனைகள் நடத்தப்பட்டது. டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தயாரித்த மின் பைக் தற்போது சந்தையில் உள்ள மின் பைக்குகளை காட்டிலும் அதிக திறனுடையதாய் 3 மணி நேரம் தொடர்ந்து பயணிக்கும் தன்மையுடயதாகவும், 250 கிலோ வரை இழு திறன் கொண்டதாகவும், சிறந்த வடிவமைப்பிலும், மழையில் கூட இயங்க கூடியதாகவும், புவியீர்ப்பு விசைக்கு ஏற்றார் போல இயங்க கூடியதாகவும், குறைந்த விலையில் தயாராக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் திறனுடையதாகவும் , புளூடூத், ஜிபிஆர்எஸ் வசதி உள்ளதாகவும், சூரிய தகடுகளை பதித்தும் இந்த மின் பைக்கை வடிவமைக்கலாம் என்ற திட்டத்தையும் முன் வைத்தனர். முடிவில் இந்த போட்டியில் சிறந்த வடிவமைப்பிற்கான பிரிவில் முதல் பரிசையும், ஒட்டு மொத்த திறன் தேர்வில் இரண்டாம் இடத்தையும் டிஜெஎஸ் பொறியியல் கல்லூரி மாணவர்களின் மின் பைக் பிடித்தது.

இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது, விழாவிற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி மாணவர்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசளித்தார். விழாவில் கல்லூரி முதல்வர் பழனி, நிர்வாக அலுவலர் ஏழுமலை, இயந்திர பொறியியல் துறை தலைவர் ஜெயவீரன் உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டி பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து