முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவானுக்கு வாய்ப்பில்லை: ஐதராபாத் அணிக்கு கேப்டனாக கனே வில்லியம்சன் நியமனம்

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னருக்குப் பதிலாக புதிய கேப்டனாக கனே வில்லியம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் பதவியிலிருந்து...

ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், கேப் டவுனில் நடந்த தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டமிட்டு சேதப்படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மூத்த வீரர்களின் ஆலோசனைப்படி தான் பந்தின் தன்மையை மாற்ற பேன்கிராஃப்ட் முயன்றதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தையும், துணை கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரையும் நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. பின்னர் அவர்களுக்கு ஓராண்டு தடையும் விதித்துள்ளது. பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாற்று வீரர்கள் ...

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா “ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டுள்ள ஸ்மித், வார்னர் இருவரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாது. அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் விளையடுவார்கள்’ என தெரிவித்தார்.

ரஹானே கேப்டன்...

இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான ஸ்மித்துக்குப் பதிலாக, ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னருக்கு பதிலாக ஷிகர் தவான் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன், கனே வில்லியம்சன் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த வாய்ப்பாக...

இதுபற்றி வில்லியம்சன் கூறும்போது, ‘திறமையான வீரர்களை கொண்ட அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளதை சிறந்த வாய்ப்பாகக் கருதுகிறேன். சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து