முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தபால் ஊழியர்களை டெலிவரி பையன்களாக பயன்படுத்தும் அமேசான் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்க தபால் ஊழியர்களை டெலிவரி பையன்களாக அமேசான் நிறுவனம் பயன்படுத்துகிறது என்று அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, அமேசான் பற்றி எனது கவலைகளை நான் தேர்தலுக்கு நீண்ட நாட்கள் முன்பாகவே தெரிவித்துள்ளேன், இந்த நிறுவனம் வரிகளே செலுத்துவதில்லை. நம் நாட்டு தபால் ஊழியர்களை தங்கள் நிறுவன டெலிவரி பையன்களைப் போல் பயன்படுத்திக் கொள்கிறது அமேசான், இதனால் அமெரிக்காவுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது, இவர்களினால் பல சில்லரை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து வர்த்தகத்தை விட்டே சென்று விட்டனர் என்று அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் அமேசான் நிறுவனம் மீது இத்தகைய அதிருப்தியை வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்பு ஆக்‌ஷியோஸ் தனது செய்தியில் அமேசான்களின் வரி கையாளுதலை மாற்ற வேண்டும் என்றும் இதனால் பல சில்லரை விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள் வர்த்தகத்தைத் துறந்துள்ளனர், எனவே அமேசான் மீது நம்பிக்கை உடைப்பு அல்லது வர்த்தகப் போட்டி சட்டம் என்று எதையாவது எழுப்ப வேண்டும் என்றும், மேலும், அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெப் பெஸாசின் இறகுகளை டிரம்ப் முறிக்க வேண்டும் என்றும் ஆக்‌ஷியோஸ் காட்டமாகத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் அமேசான் மீதான காட்டமான அதிருப்தியினால் பங்குச் சந்தையில் அமேஸான் பங்குகளின் விலை 9 சதவீத  சரிவை கண்டுள்ளது. இப்போதைக்கு இண்டெர்னெட் விற்பனை வரி இல்லை, இனிமேல்தான் உருவாக்க வேண்டுமென்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. 1994-ம் ஆண்டு ஆன் லைன் வர்த்தகத்தில் நுழைந்த பெஸாசின் அமேசான் இப்போது உலக வர்த்தகத்தில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து